/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடகளத்தில் 'தடம்' பதித்த 'மூத்தோர்' விளையாட்டு செய்திகள்
/
தடகளத்தில் 'தடம்' பதித்த 'மூத்தோர்' விளையாட்டு செய்திகள்
தடகளத்தில் 'தடம்' பதித்த 'மூத்தோர்' விளையாட்டு செய்திகள்
தடகளத்தில் 'தடம்' பதித்த 'மூத்தோர்' விளையாட்டு செய்திகள்
ADDED : பிப் 15, 2024 12:03 AM

திருப்பூர் : தேசிய வெட்ரன்ஸ் அத்லெட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, 53 பதக்கங்களை கைப்பற்றிய, திருப்பூர் மாவட்ட அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் பிப்., 2 முதல், 4 வரை, மூன்று நாட்கள், 43வது தேசிய வெட்ரன்ஸ் அத்லெட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. 22 மாநிலங்களை சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனையர் பங்கேற்றனர்.
தமிழக அணிக்காக, திருப்பூரில் இருந்து, 16 பேர் பங்கேற்றனர்.40 வயது பிரிவில் முருகப்பெருமாள் மும்முறை தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதலில் தங்கம், உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார்.55 வயது பிரிவில் மனோகரன், 800மீ., ஓட்டத்தில் வெள்ளி, 10 ஆயிரம் மீ., தொடர் ஓட்டத்தில் வெண்கலம், 65 வயது பிரிவில் ராஜகோபால் தொடர் ஓட்டத்தில் வெண்கலம்.
குமரேசன் 200மீ., ஓட்டம் மற்றும், 400மீ., தொடர் ஓட்டத்தில் தங்கம், 400மீ., ஓட்டம் மற்றும் 200மீ., தடைதாண்டும் போட்டியில் வெள்ளி.
செந்தில்குமார் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் தங்கம், 200மீ., ஓட்டத்தில் வெள்ளி, 100 மீ., ஓட்டத்தில் வெண்கலம், ராஜா ஈட்டிஎறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் மூன்றிலும் தங்கம், சங்கிலி குண்டு எறிதலில் வெள்ளி, முனீஸ்வரன், நீளம் தாண்டுதலில் வெள்ளி, மும்முறை தாண்டுதலில் வெண்கலம், கிருஷ்ணமூர்த்தி ஐந்து கி.மீ., நடைபோட்டியில் தங்கம்,
அருண் பிரதீப் ஈட்டி எறிதலில் வெள்ளி, சங்கிலி குண்டு எறிதலில் வெண்கலம், ரம்யா நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதலில் தங்கம், 100மீ., ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டத்தில் வெள்ளி, ஜோதி கந்தசாமி சங்கிலி குண்டு மற்றும் வட்டி எறிதல், 5கி.மீ., நடைப்போட்டி, தொடர் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளி, ஸ்ரீ வித்யா நிகேதன் பள்ளி முதல்வர் திவ்யா மும்முறை தாண்டுதல், 5கி.மீ., 10கி.மீ., ஓட்டத்தில் வெள்ளி, 80 வயது பிரிவில் ஞானஎப்ஹிபா, 100மீ., குண்டு எறிதல், வட்டு எறிதலில் தங்கம், அகிலாண்டேஸ்வரி 400மீ., ஓட்டத்தில் வெண்கலம், வெட்ரன்ஸ் திருப்பூர் செயலாளர் சுமதி சங்கிலி குண்டு எறிதலில் தங்கம், குண்டு எறிதல் மற்றும் வட்டுஎறிதலில் வெள்ளி வென்றார்.
மாவட்டத்தில் இருந்து ஒன்பது ஆண்கள், ஆறு பெண்கள் என 16 பேர் கலந்து கொண்டு, 16 தங்கம், 18 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம், 53 பதக்கங்களை அள்ளினர்.
இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை தமிழகம் பெற்றது. மாநில போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

