/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செந்துார் மெடிக்கல் சென்டர் திருப்பூரில் திறப்பு
/
செந்துார் மெடிக்கல் சென்டர் திருப்பூரில் திறப்பு
ADDED : பிப் 04, 2025 07:43 AM

திருப்பூர்; திருப்பூரில், செந்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை திறக்கப்பட்டது. திருப்பூர், தாராபுரம் ரோடு, வேலாயுதசாமி திருமண மண்டபம் அருகில், செந்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மருத்துவமனையை திறந்து வைத்தனர். திருப்பூர் ஏ.ஜி., மருத்துவமனை தலைவர் டாக்டர் முருகநாதன், அதிதீவிர சிகிச்சை பிரிவை திறந்து வைத்து பேசினார். காடேஸ்வரா சுப்ரமணியம், பாலசுப்ரமணியம், டாக்டர் பிரேமா கோவிந்தராஜ், 'எக்சலான்' ராமசாமி, 'சிபிசி' விஜயகுமார், வாசு குடும்பத்தினர், ராஜா சண்முகம், சதீஷ்குமார், டாக்டர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மருத்துவமனை சார்பில் டாக்டர்கள் சத்தியமூர்த்தி, தீபா, ராஜேந்திரன், ஜகதீஸ்வரி, சந்திரசேகர் மற்றும் ராதாசந்திரசேகர், டாக்டர் சஞ்சீவ் பிரணவ் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், ''மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவு, உயிர்காக்கும் நவீன மருத்துவ உபகரணங்களை கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, உயர்தர அறுவை சிகிச்சை பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தை நல மருத்துவம், எலும்பியல் மருத்துவம், பல் மருத்துவப்பிரிவு வெளிநோயாளிகள் பிரிவு, பிரத்யேக லேப், ஸ்கேன் மற்றும் எக்ஸரே கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தரமான மருத்துவத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் தயாராக உள்ளனர்'' என்றனர்.