/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவேகானந்தா அகாடமியில் 'சேவா' திட்டம் சிறப்பு
/
விவேகானந்தா அகாடமியில் 'சேவா' திட்டம் சிறப்பு
ADDED : அக் 30, 2025 12:54 AM

திருப்பூர்:  காங்கயம் விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில், சி.பி.எஸ்.இ. வழிகாட்டுதல்படி,  'சேவா' (-வேலை, கல்வி மற்றும் செயல் மூலம் சமூக மேம்பாடு) திட்டத்தின் கீழ் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை வளர்ப்பு, முதியோர் நலன், சுத்தம் - சுகாதாரம், முதலுதவி போன்ற தலைப்புகளில் செயல்திட்டங்களை வடிவமைத்தனர்.
மாணவர்கள் சமூகத்தில் பொறுப்புள்ள குடிமக்களாக மாறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொண்டனர்.
பள்ளி முதல்வர் பத்மநாபன், இத்திட்டம் மாணவர்களின் மனிதநேயம், தலைமைத்துவம், சேவை மனப்பான்மையை ஊக்குவிப்பதாகக் கூறி பாராட்டினார்.

