/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் நடக்கும் வழியில் பாயும் சாக்கடைக் கழிவு
/
மக்கள் நடக்கும் வழியில் பாயும் சாக்கடைக் கழிவு
ADDED : அக் 30, 2025 11:57 PM
அவிநாசி:  அவிநாசியில் நடைபெற்ற சிறப்பு வார்டு சபா கூட்டத்தில், 1வது வார்டு காமராஜர் நகர், புளியங்காடு பகுதியில் உள்ள தெற்கு வீதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த வீடுகளுக்கு செல்லும் வழியை, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழியை ஒட்டி, உள்ள காம்பவுண்ட் வீடுகள் உள்ள பகுதியில் இருந்து தனியார் ஒருவர் சாக்கடை கழிவு நீரை பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் வெளியேற்றுகிறார்.
இதனால், மழைக்காலங்களில் மழைநீருடன் சேர்ந்து கழிவு நீரும் அப்பகுதியில் நிற்கிறது. அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவ அச்சாரமாக உள்ளது. எனவே,  சுகாதார சீர்கேட்டை களையும் வகையில், உடனடியாக சாக்கடை கழிவுநீரை வெளியேற்றும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென, பொதுமக்கள், நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

