/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்; நிலத்தடி நீர் பாதிக்காது'
/
'கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்; நிலத்தடி நீர் பாதிக்காது'
'கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்; நிலத்தடி நீர் பாதிக்காது'
'கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்; நிலத்தடி நீர் பாதிக்காது'
ADDED : ஏப் 14, 2025 05:57 AM

பல்லடம் : பல்லடம் நகராட்சிக்குட்பட்ட, 18 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டம், நகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.
திட்டத்தை நிறைவேற்ற வார்டு பகுதிகளில் இருந்து கழிவுநீர் கொண்டு செல்லப்பட்டு, வடுகபாளையம் புதுார் கிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிலத்தடி நீர் பாதிக்கும்; கழிவுநீரை கொண்டு செல்வதால் துர்நாற்றம் வீசும் என்பது உள்ளிட்ட குழப்பம் மக்கள் மத்தியில் நீடித்து வருகிறது.
நகராட்சி கமிஷனர் மனோகரன் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம், கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்துக்காக, நான்கு இடங்களில் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும். வடுகபாளையத்தில் அமைக்கப்படும் சுத்திகரிப்பு மையத்தில் நீர் சேகரித்து வைக்கப்பட்டு, மீண்டும் நகராட்சி பகுதிகளுக்கு தான் பயன்படுத்தப்பட உள்ளது. கழிவு நீரை சுத்திகரித்த பின்னரே, அது பயன் படுத்தப்பட உள்ளது.
இதனால், துர்நாற்றம் ஏற்படவோ, நிலத்தடி நீர் பாதிக்கவோ வாய்ப்பு இல்லை. மாறாக, திறந்தவெளியில் தேங்கி நிற்கும் கழிவு நீரால், கொசுப்புழுக்கள் உற்பத்தி தவிர்க்கப்பட்டு, நோய் பாதிப்பு குறையும்.
கழிவுநீருடன் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் சேர்வது தவிர்க்கப்படும் என்பதால், நிலத்தடி நீர் மாசடைவதும் தடுக்கப் படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், மீண்டும் நகராட்சி பகுதிகளுக்கே பயன்படுத்தப்பட உள்ளதால், நிலத்தடி நீர் பாதிக்கும் என்ற அச்சம் தேவையில்லை.
பாதாள சாக்கடைக்கு மாற்றாக, பல்லடம் நகராட்சிக்கு தேவைப்படும் நல்லதொரு திட்டமாகும். புரிதல் இல்லாமல், சிலர், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், பல்லடம் நகராட்சி துாய்மையான நகராக மாறும்.