/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம்
ADDED : ஆக 10, 2025 10:09 PM
- நமது நிருபர் -
திருப்பூர் மாவட்டத்தில், மோட்டார் பொருத்திய இலவச தையல் மெஷினுக்காக ஆன்லைனில் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேர்காணலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் நடத்தினார்.
'ஆன்லைனில்' விண்ணப்பித்திருந்த, 183 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நேர்காணலில், மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலர்கள் 127 பேர் பங்கேற்றனர். அவர்கள், தையல் மெஷினில் அமரவைக்கப்பட்டு, நுால் துணி வழங்கப்பட்டு, தையல் தெரியுமா என பரிசோதிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டனர். நேர்காணலில், மொத்தம் 97 பேர், இலவச தையல் மெஷினுக்கு பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.