/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; விசாரணைக்கு பா.ஜ., வலியுறுத்தல்
/
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; விசாரணைக்கு பா.ஜ., வலியுறுத்தல்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; விசாரணைக்கு பா.ஜ., வலியுறுத்தல்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; விசாரணைக்கு பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2025 11:24 PM

திருப்பூர்; திருப்பூர் பா.ஜ., மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில், நிர்வாகிகள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
திருப்பூர், கே.வி.ஆர்., பகுதியில் உள்ள கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 1ம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதனை மூடி மறைக்க சென்ட்ரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் முயன்றுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சம்பவம் நடந்த போது, பள்ளி ஆசிரியை கீர்த்தனா, அந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியும் உள்ளார். இதற்கு பள்ளி தாளாளரும் உடந்தையாக இருந்துள்ளார்.
அந்த குழந்தையின் தாய் மாமன், தி.மு.க.,வின் உறுப்பினர்; பள்ளி தாளாளரும் தி.மு.க., சுற்றுச்சூழல் பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் என்பதால் குழந்தையின் பெற்றோரையும் மிரட்டியுள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் உள்ள 'சிசிடிவி' கேமராக்கள் செயல்படுவதாக தெரியவில்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.