/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மும்மூர்த்திகளின் சிவலிங்க தரிசனம்
/
மும்மூர்த்திகளின் சிவலிங்க தரிசனம்
ADDED : ஜூலை 14, 2025 08:04 PM
உடுமலை; உடுமலை பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில் சோமநாதர், காசி விஸ்வநாதர், வைத்தியநாதர் சுவாமிகளின் சிவலிங்க தரிசன நிகழ்ச்சி நடந்தது.
சங்கராமநல்லுார் சர்வேஸ்வரா மண்டபத்தில், உடுமலை பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில் சோமநாதர், காசிவிஸ்வநாதர், வைத்திநாதர் உள்ளிட்ட மும்மூர்த்திகளின் சிவலிங்க தத்துரூப தரிசன நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடந்தது.
சங்கராமநல்லுார் பேரூராட்சி தலைவர் மல்லிகா துவக்கி வைத்தார். பேரூராட்சி நிர்வாகத்தினர், தன்னார்வலர்கள் முன்னிலை வகித்தனர்.
ராஜயோக தியான அறை படவிளக்க கண்காட்சிகள், ேஹாலோகிராபி வீடியோக்கள் திரையிடப்பட்டன. சுற்றுப்பகுதியிலிருந்து திரளானோர் பங்கேற்று சிவலிங்கத்தை பார்வையிட்டனர்.