/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடை முன் 'அகழி' வியாபாரிகள் அவதி
/
கடை முன் 'அகழி' வியாபாரிகள் அவதி
ADDED : ஏப் 14, 2025 04:52 AM

பல்லடம் : பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட, அருள்புரம் -- உப்பிலிபாளையம் ரோட்டில், கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கும் பணி கடந்த ஓராண்டுக்கு முன் துவங்கியது. குழி தோண்டப்பட்ட நிலையில், பணிகள் பாதியில் கைவிடப்பட்டது. தோண்டப்பட்ட குழியையும் மூடாமல், கழிவு நீர் கால்வாயும் அமைக்காமல், பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
வியாபாரிகள் கூறுகையில், 'இப்பகுதியில் ஏராளமான கடைகள் வணிக வளாகங்கள் உள்ளன. குழி தோண்டப்பட்டுள்ளதால், கடைகளுக்கு வாடிக்கையாளர் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. சமீபத்தில் ரோடு போடும் பணி நடந்தது. அப்போதாவது, குழியை மூட நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். தற்போது பெய்த மழையால், குழிக்குள் மழைநீர் தேங்கி வாய்க்கால் போன்று உள்ளது. நிலுவையில் உள்ள கால்வாய் பணியை முடிக்க வேண்டும் அல்லது தோண்டப்பட்ட குழியை மூட வேண்டும்' என்றனர்.