/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் சந்தை அருகே கடைகள்; அதிகாரிகளுடன் வாக்குவாதம்
/
உழவர் சந்தை அருகே கடைகள்; அதிகாரிகளுடன் வாக்குவாதம்
உழவர் சந்தை அருகே கடைகள்; அதிகாரிகளுடன் வாக்குவாதம்
உழவர் சந்தை அருகே கடைகள்; அதிகாரிகளுடன் வாக்குவாதம்
ADDED : செப் 12, 2025 10:46 PM
தாராபுரம்; தாராபுரம் உழவர் சந்தை அருகே, பிளாட்பாரக் கடைகளை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம் நகராட்சி, 20வது வார்டு, அண்ணா நகர் பகுதியில் உழவர் சந்தை உள்ளது. ஏராளமான விவசாயிகள் இங்கு தினமும் தங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். உழவர் சந்தை சுற்றுப்பகுதியில் உள்ள வீதிகளில் சிலர் காய்கறி கடைகளை வைத்து விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது.
இது போன்ற பிளாட்பாரக் கடைகளால் உழவர் சந்தையில் விற்பனை பாதிக்கிறது என, உழவர் சந்தை விவசாயிகள் தரப்பில் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாக இருந்தது.
இந்நிலையில், நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் சென்ற நகராட்சி அலுவலர்கள், உழவர் சந்தைக்கு அருகேயுள்ள ஒரு பகுதியில் பிளாட்பாரத்தில் கடை வைத்திருந்த சில கடைகளை அப்புறப்படுத்துமாறு தெரிவித்தனர். கடைகளை அப்புறப்படுத்தாவிட்டால், துாய்மைப்பணியாளர்கள் பொருட்களை வாகனத்தில் ஏற்றிச் சென்று விடுவர் என அலுவலர்கள் எச்சரித்தனர். இதனால், அங்கு திரண்ட மற்ற வியாபாரிகள் நகராட்சி அலுவலர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் நடத்தினர். இதனால், கடைகளை அகற்றாமல் அலுவலர்கள் திரும்பிச் சென்றனர்.