/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய போட்டிகள் துவங்கின; கேரம் விளையாட 398 பேர் ஆர்வம்
/
குறுமைய போட்டிகள் துவங்கின; கேரம் விளையாட 398 பேர் ஆர்வம்
குறுமைய போட்டிகள் துவங்கின; கேரம் விளையாட 398 பேர் ஆர்வம்
குறுமைய போட்டிகள் துவங்கின; கேரம் விளையாட 398 பேர் ஆர்வம்
ADDED : ஜூலை 14, 2025 11:47 PM

திருப்பூர்; திருப்பூரில் குறுமைய விளையாட்டுத்திருவிழா நேற்று துவங்கியது. கேரம் போட்டியில், 398 மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அரசுப் பள்ளியில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியரை தேர்வு செய்ய பள்ளி கல்வித்துறை குறுமைய விளையாட்டு போட்டிகளை நடத்துகிறது. அவ்வகையில், திருப்பூர் வடக்கு குறுமைய விளையாட்டு போட்டி நேற்று துவங்கியது.
தனிநபர், குழு கேரம் போட்டி, குமார்நகர் பிஷப் உபகாரசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது. வாவிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார். பிஷப் பள்ளி தாளாளர் மரியஆண்டனி தலைமை வகித்தார்.
பிஷப் பள்ளி தலைமை ஆசிரியர் பிட்டர்மரியதாஸ் கேரம் போட்டிகளை துவக்கி வைத்தார். குறுமைய இணை செயலாளர் இளங்கோவன் ஏற்பாடுகளை செய்திருந்தார். வடக்கு குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து, 14, 17 மற்றும், 19 வயது பிரிவில், 218 மாணவர்கள், 180 மாணவியர் என, 398 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாணவியர் இரட்டையர், 14, 17 மற்றும் 19 வயது மூன்று பிரிவில், ஸ்ரீ சாய்பள்ளி வெற்றி பெற்று அசத்தி, பாராட்டு பெற்றது.தொடர்ந்து தனிநபர் பிரிவு மாணவ, மாணவியருக்கான போட்டிகள் நடந்தது. செல்வி, ராஜா, பூபாலன், சிவக்குமார், அருண், நடராஜ், வைதேகி, ஜமீலா, காஞ்சனா ஆகிய விளையாட்டு ஆசிரியர்கள், நடுவர்களாக பணியாற்றினர்.
அய்யங்காளிபாளையம் அசத்தல்
கேரம், 14 வயது மாணவர் தனிநபர் பிரிவில் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, இரட்டையர் பிரிவில் இன்பாண்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி, 17 வயது தனிநபர், இரட்டையர் இரண்டு பிரிவில் வி.கே.ஜி., அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம். மாணவியர் தனிநபர், 14 வயது பிரிவில் பாண்டியன்நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, 17 வயது பிரிவில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 19 வயதுபிரிவில் இன்பாண்ட் ஜீசஸ் மெட்ரிக் முதலிடம் பெற்றது.