UPDATED : நவ 06, 2026 07:37 PM
ADDED : நவ 06, 2026 06:46 PM
அ நிறம் | அளவு
உடுமலை: அமராவதி ஆயக்கட்டு பாசன பகுதிகளில் நெல் சாகுபடி துவங்கியுள்ள நிலையில், வேளாண் துறையால், மானிய விலையில் விதை நெல் வினியோகம் செய்யப்படுகிறது.
மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது :
அமராவதி ஆயக்கட்டு பாசன பகுதிகளில், நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, குறுகிய கால ரகமான, கோ–51 ரக விதை நெல் தேவையான அளவு இருப்பு உள்ளது.
மானிய விலையில் விதை நெல் மட்டுமின்றி, ரசாயண உர பயன்பாட்டினை குறைக்கும் வகையில், அனைத்து வகை நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, பொட்டாஷ் பேக்டீரியா, துத்தநாக பேக்டீரியா, ரைசோபியம், அசோபாஸ் போன்ற நுண்ணுயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது.
இவ்வாறு, தெரிவித்தார்.
