/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாகனங்கள் தாறுமாறு; சிக்னல் அவசியம்
/
வாகனங்கள் தாறுமாறு; சிக்னல் அவசியம்
ADDED : ஏப் 24, 2025 06:36 AM
திருப்பூர்; நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முக சுந்தரம், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.
வடக்கிருந்து காமராஜர் ரோடு வழியாக வரும் வாகனங்கள், பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று, ரவுண்டானா வழியாக, பல்லடம், தாராபுரம், காங்கயத்துக்கு செல்கின்றன. ரவுண்டானா பகுதியில் சிக்னல் இல்லை; போக்குவரத்து போலீசாரும் நிற்பதில்லை. வாகனங்கள் தாறுமாறாக சென்று திரும்புவதால், விபத்து அபாயம் உள்ளது.
காமராஜர் ரோட்டில் வரும் வாகனங்கள், பல்லடம் ரோட்டை அடையும்போது, தாராபுரம் ரோட்டிலிருந்து வாகனங்கள் வரும்போது நேர் எதிரே மோதும் நிலை ஏற்படுகிறது. காமராஜர் ரோட்டிலிருந்து வரும் அரசு பஸ்கள், ரவுண்டானாவை சுற்றாமல், குறுக்கு வழியில் பஸ் ஸ்டாண்டுக்கு செல்வதால், இடையூறு ஏற்படுகிறது. ரவுண்டானா பகுதியில் சிக்னல் அமைத்து, விபத்து மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல், பாதுகாப்பான பயணத்தை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும்.

