/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டுப்புழு வளர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்
/
பட்டுப்புழு வளர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : செப் 12, 2025 10:49 PM
பொங்கலுார்; பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம், பட்டு வளர்ச்சித்துறை சார்பில், வாவிபாளையம் ஊராட்சி, முத்துாரில் நடந்தது.
பட்டுப்புழு வளர்ப்பில் பால் புழு, கரும்புழு, நோய் தாக்குதல் ஆகியவை வருவதை தடுக்கும் முறைகள் குறித்து தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டது. மல்பெரி தோட்டம் பராமரிப்பு, தொழு உரம், கெமிக்கல் உரம் இடும் அளவு குறித்த உர மேலாண்மை, கிருமி நீக்கம் செய்வதன் மூலம் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மத்திய பட்டு வளர்ச்சி வாரிய விஞ்ஞானி டேனியல், பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் சுந்தர், இளநிலை ஆய்வாளர் செல்வேந்திரன், தொழில்நுட்ப உதவியாளர் செல்லையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.