/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவியர் திறன் மேம்பாடு; 'மகிழ் முற்றம்' உதவிகரம்
/
மாணவியர் திறன் மேம்பாடு; 'மகிழ் முற்றம்' உதவிகரம்
ADDED : செப் 01, 2025 12:27 AM

பல்லடம்; அரசு பள்ளி மாணவர்களிடையே தலைமை ப ண்பை வளர்க்கும் வகையில், 'குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, ஐவகை நிலங்களின் பெயர்களில், மாணவர் மகிழ் முற்றம் குழுக்கள் உருவாக்க வேண்டும்' என, கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதைப் பின்பற்றி, அனைத்து அரசு பள்ளிகளிலும், மகிழ்முற்றம் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், மகிழ் முற்றம் குழுவை உருவாக்கியவுடன், அதை சிறப்பாகவும் செயல் படுத்தி வருகிறது.
பள்ளி தலைமை ஆசிரியை பிரெய்ஸி கவிதா கூறுகையில், 'ஐவகை நிலங்களின் பெயரிட்டு, மாணவியர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மாதந்தோறும் குழுக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு குழுவிலும் உள்ள மாணவியரின் அனைத்து செயல்பாடுகளும் கணக்கிடப்பட்டு, அதன்படி மதிப்பீடு வழங்கப்படும். எந்த குழு அதிக மதிப்பெண் பெறுகிறதோ, அம்மாதம் முழுவதும், அந்த குழுவின் பெயருடைய கொடிதான் பள்ளியில் பறக்கும். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் குழுக்களின் மதிப்பீடு சேகரிக்கப்படுகிறது. இது மாணவியரின் திறனை மேம்படுத்த உதவுகிறது' என்றார்.
முன்னதாக, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, ஐவகை நிலங்களின் பெயர்களுடன், மாணவியருக்கு 'பேட்ஜ்' வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த குழுவை சேர்ந்த மாணவியரின் சீருடையிலேயே அந்த 'பேட்ஜ்'கள் தைக்கப் பட்டுள்ளன.