ADDED : ஜன 24, 2025 11:35 PM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் - பி.என்., ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. பணி முடிந்த இடங்களில் கூட நீண்ட நாட்களாக ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், குழி தோண்டப்பட்ட பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் முறையாக செல்ல முடியாததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தை சந்தித்து வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், 'குடிநீர் குழாய் பதிக்க ரோட்டில் குழி தோண்டப்பட்டதால் பாதி ரோடு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மீதி ரோடு குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
போக்குவரத்து நெருக்கடியால் காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்வோர் வேலைக்கு செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
குழாய் பதிக்கும் பணி முடிந்த இடங்களில் உடனுக்குடன் ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

