/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி ரத்த தான முகாம்
/
ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி ரத்த தான முகாம்
ADDED : ஆக 11, 2025 11:34 PM

திருப்பூர்; ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் சக்கரவர்த்தி பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ், ரோட்டரி, ஐ.எம்.ஏ., ரத்த வங்கி இணைந்து, விஜயமங்கலம் குமார் மஹாலில் ரத்த தான முகாம் நடத்தின.திருப்பூர், ஸமார்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அருள்செல்வம், தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, ரோட்டரி திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி பட்டய தலைவர் பாலசுப்ரமணியம், ரோட்டரி திருப்பூர் மாவட்ட ரத்த தான பிரிவு தலைவர் கமலபாஸ்கர், ரோட்டரி ஐ.எம்.ஏ., ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி, செயலாளர் டாக்டர் பொம்முசாமி, விஜயமங்கலம் குமார் மஹால் உரிமையாளர் குணசேகர், சக்கரவர்த்தி பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். முகாமில், 105 யூனிட் ரத்தம் கொடையாக பெறப்பட்டு, திருப்பூர் ஐ.எம்.ஏ., ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.