UPDATED : நவ 20, 2026 06:52 PM
ADDED : நவ 20, 2026 06:52 PM

திருப்பூர்: அம்மாபாளையம் ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் அறிவியல் துறை மற்றும் அறிவியல் மன்றம் சார்பில் ‘விஞ்ஞான் அரீனா 2026’ என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்கள் சார்ந்த புதுமையான படைப்புகள், செயல்முறை மாதிரிகள் மற்றும் அறிவியல் சோதனைகளை காட்சிப்படுத்தினர். மாணவர்கள் தங்களது படைப்புகளின் செயல்பாடுகள், அவற்றின் பின்னணியில் உள்ள அறிவியல் கோட்பாடுகள் மற்றும் அன்றாட வாழ்வில் அவற்றின் பயன்பாடுகள் குறித்து விளக்கினர்.
மாணவர்களின் படைப்பாற்றல், அறிவியல் சிந்தனை மற்றும் குழு மனப்பான்மையை வளர்க்கும் வகையில் அமைந்த இக்கண்காட்சி, பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது.
