/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனி பொழியும்; பக்தி மணம் பரவும் மார்கழித்திங்கள் நாளை பிறக்கிறது
/
பனி பொழியும்; பக்தி மணம் பரவும் மார்கழித்திங்கள் நாளை பிறக்கிறது
பனி பொழியும்; பக்தி மணம் பரவும் மார்கழித்திங்கள் நாளை பிறக்கிறது
பனி பொழியும்; பக்தி மணம் பரவும் மார்கழித்திங்கள் நாளை பிறக்கிறது
ADDED : டிச 14, 2024 11:32 PM

திருப்பூர்: மார்கழி நாளை பிறக்கிறது; கோவில்கள், இல்லங்களில் பக்தி மணம் கமழப்போகிறது. 'மாதங்களில் நான் மார்கழி' என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். சிறப்புகள் வாய்ந்தது 'தனுர் மாதம்' எனப்படும் மார்கழி.
தட்சணாயனக் காலம் மார்கழியுடன் நிறைவடைகிறது. மார்கழி மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்த வழிபாடுகள் நடத்தப் படுகின்றன.
சூரிய உதயத்துக்கு முன்னதாக, பிரம்ம முகூர்த்த காலத்தில் அனைத்து கோவில்களிலும் வழிபாடு நடைபெறும். திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் ஒலிக்கும். கூட்டு பஜனையுடன் வழிபாடு நடைபெறும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து கோவில்களிலும், மார்கழி வழிபாடு நாளை (16ம் தேதி) துவங்குகிறது. அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவில் மற்றும் வீடுகளில், கோலமிடப்பட்டு, சாணத்தில் பிள்ளையார் பிடித்து அரசாணிப்பூ உள்ளிட்ட பூ வகைகள் வைத்து அலங்கரிக்கப்படும். திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பாராயணம், கூட்டு பஜனையுடன் ரத வீதிகளில் பக்தி மணம் கமழப் போகிறது.