/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சூரிய வீடு மின்சார திட்டம்; பொதுமக்களுக்கு அழைப்பு
/
சூரிய வீடு மின்சார திட்டம்; பொதுமக்களுக்கு அழைப்பு
சூரிய வீடு மின்சார திட்டம்; பொதுமக்களுக்கு அழைப்பு
சூரிய வீடு மின்சார திட்டம்; பொதுமக்களுக்கு அழைப்பு
ADDED : செப் 27, 2025 12:06 AM
திருப்பூர்; பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் குறித்த விளக்க முகாம் அவிநாசி கோட்டத்தில் 29ம் தேதி நடக்கிறது.
அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி அறிக்கை: அவிநாசி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் மின் இணைப்புகளை சோலார் மின் இணைப்புகளாக மாற்றப்படவுள்ளது. பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் இந்த மின் இணைப்புகள் சூரிய ஒளி மின் இணைப்புகளாக மாற்றப்படும். இது குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் 29ம் தேதி, திருமுருகன்பூண்டி சிக்னல் அருகேயுள்ள அன்னமயி ஓட்டல் வளாகத்தில் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி இம்முகாம் நடைபெறும்.
இத்திட்டத்தில், விரைவாக மின் இணைப்புகள் வழங்குவது குறித்த வங்கி அலுவலர்கள் பங்கேற்று விளக்கம் அளிக்கவுள்ளனர். அதே போல், சோலார் மின் தகடு அமைக்கும் நிறுவனத்தினரும், மின் இணைப்பு மற்றும் அரசு மானியம் பெறுவது குறித்து மின் வாரியத்தினரும் விளக்கமளிக்கவுள்ளனர். அவிநாசி கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் இதில் பங்கேற்றுப் பயன் பெறலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.