தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சோலார் மின் திட்ட முகாம் இன்று துவங்குகிறது

சோலார் மின் திட்ட முகாம் இன்று துவங்குகிறது

சோலார் மின் திட்ட முகாம் இன்று துவங்குகிறது


UPDATED : அக் 15, 2026 12:00 AM

ADDED : அக் 14, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 12:00 AM ADDED : அக் 14, 2026 09:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: பிரதம மந்திரி சோலார் மின் திட்டம் தொடர்பான சிறப்பு முகாம்கள், காங்கயம், பல்லடம், தாராபுரத்தில் இன்று முதல் 17ம் தேதி வரை நடக்கின்றன. ஒரு கிலோவாட்டுக்கு ரூ.35 ஆயிரம், 2 கிலோவாட்டுக்கு ரூ.70 ஆயிரம், 3 கிலோவாட்டுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

காங்கயம் அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் கட்டடத்தில் இன்று, பல்லடம் உடுமலை ரோடு சரஸ்வதி மஹாலில் நாளை, தாராபுரம் பிஷப் தோர்ப் கல்லுாரியில் 17ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடக்கிறது. காங்கயத்தில் இன்று மதியம் 2:30 முதல் மாலை 5:30 மணி வரை விளக்கக் கூட்டமும் நடக்கிறது.

காங்கயம், வெள்ளகோவில், முத்துார், பல்லடம், பொங்கலுார், தாராபுரம், மூலனுார், குண்டடம் பகுதிகளைச் சேர்ந்தோர் மின் கட்டண ரசீது, ஆதார் அட்டை நகலுடன் பங்கேற்கலாம் என, பல்லடம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us