/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வழிகாட்டுதல் இல்லாமல் சிறப்பு பஸ் பயணிகள் தவிப்பு
/
வழிகாட்டுதல் இல்லாமல் சிறப்பு பஸ் பயணிகள் தவிப்பு
ADDED : ஜன 16, 2025 04:31 AM

திருப்பூர் : பொங்கல் சிறப்பு பஸ் ஏற்பாடு மற்றும் வழிகாட்டுதல்களில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் முன்னேற்பாடுகளை செய்யவில்லை என டிரைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், கும்பகோணம், திருச்சி, உள்ளிட்ட பகுதியில் இருந்து திருப்பூர் வரும் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கு பயணிகளை இறக்கிவிட்டு, ஏற்றி அழைத்து செல்கின்றன.
ஈஸ்வரன் கோவில் - ஸ்ரீ சக்தி தியேட்டர் ரவுண்டானா பாலம் உயர்த்திக் கட்டும் பணி நடந்ததால், திருச்சி வரும் பஸ்களின் போக்குவரத்து மாற்றப்பட்டது.
காங்கயம் ரோடு வரும் பஸ்கள் வளம் பாலம் முன், பூ மார்க்கெட் வழியாக வளர்மதி ஸ்டாப் வந்து எம்.ஜி.ஆர்., சிலை வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் திருப்பி விடப்பட்டது. பாலம் பணி காரணமாக, செல்லாண்டியம்மன் துறை, வளம்பாலம், ஈஸ்வரன் கோவில் பாலம் உள்ளிட்ட இடங்களில் நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்ட வழித்தட அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டு விட்டது.
இதனால், புதிய பிற மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு வந்த சிறப்பு பஸ் டிரைவர், நடத்துனர்கள் புதிய பஸ் ஸ்டாண்ட் எதுவென்று தெரியாமல், வழியில் பயணித்தவர்களிடம் எல்லாம் வழிகேட்டுச் சென்றனர்.
ஈஸ்வரன் கோவில் பாலம் அருகே வந்த சில பஸ்கள் பொங்கல் திருவிழா நடந்ததால், எந்த வழியில் பயணிக்க வேண்டுமென தெரியாமல், பஸ் 'ரிவர்ஸ்' எடுத்து, யூனியன் மில்ரோடு, ஊத்துக்குளி ரோடு வழியாக சென்றனர். இதனால், பஸ் ஊழியர்கள், பயணிகள் சிரமப்பட்டனர்.

