/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ரேபிஸ் நோய்' விழிப்புணர்வு: பள்ளியில் சிறப்பு முகாம்
/
'ரேபிஸ் நோய்' விழிப்புணர்வு: பள்ளியில் சிறப்பு முகாம்
'ரேபிஸ் நோய்' விழிப்புணர்வு: பள்ளியில் சிறப்பு முகாம்
'ரேபிஸ் நோய்' விழிப்புணர்வு: பள்ளியில் சிறப்பு முகாம்
ADDED : செப் 01, 2025 07:22 PM
உடுமலை:
பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 'ரேபிஸ்' நோய் காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இம்முகாம் நடந்தது.
மத்திய, மாநில அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நிதியில், 'விலங்கு வழி பரவல் நோய்', குறித்த விழிப்புணர்வு திட்டத்தின் கீழ், இத்தகைய முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில், 'ரேபிஸ்' நோய் காரணிகள், தடுக்கும் முறைகள், தடுப்பூசியின் முக்கியத்துவம், வெறிநோய் குறித்த தவறான புரிதல் என்ற தலைப்புகளில், மாணவர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாமில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 140க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முகாமை கால்நடை மருத்துவ கல்லுாரி பண்ணை வளாக உதவி பேராசிரியர் சங்கமேஸ்வரன் ஒருங்கிணைத்தார்.