மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் ஆலோசனை வழங்கிய டாக்டர்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் ஆலோசனை வழங்கிய டாக்டர்கள்
UPDATED : நவ 13, 2026 04:18 PM
ADDED : நவ 13, 2026 04:16 PM

உடுமலை: உடுமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், தனியார் திருமண மண்டபத்தில் இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இந்த முகாமில் உடுமலை ஒன்றியம், நகரம், குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
முகாமில் மருத்துவப் பரிசோதனைகளுக்குப்பின்னர், தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்குப் புதிய மாற்றுத்திறனாளி அடையாளச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஏற்கனவே சான்றிதழ் பெற்றவர்கள் அதனை புதுப்பிக்கவும், புதிய அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஏற்கனவே உள்ள அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பாஸ் மற்றும் ரயில் பாஸ் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
எலும்பியல் மருத்துவம், பொது மருத்துவம் மற்றும் நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம் மற்றும் உளவியல் ஆகிய துறைகளைச்சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்குப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
உடுமலையைச்சேர்ந்த, ‘கை கொடுக்கும் கரங்கள்’ அறக்கட்டளை மற்றும் லைஃப் அஸ் எ தாட் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் இணைந்து முகாமை ஒருங்கிணைத்தனர்.
