ADDED : பிப் 16, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: வரும், 19 மற்றும் 20ம் தேதிகளில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம், தாராபுரம் தாலுகாவில் நடக்கிறது.
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழு, குறிப்பிட்ட தாலுகாவில் முகாமில், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, உடனடியாக தீர்வு வழங்கி வருகிறது. அதன்படி, தாராபுரம் தாலுகாவில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம், 19ம் தேதி நடக்க உள்ளது.
வரும், 19ம் தேதி காலை, 9:00 மணிக்கு துவங்கி, 20 ம் தேதி காலை, 9:00 மணி வரை, அரசு அலுவலர்கள், அரசு அலுவலகங்களுக்கு சென்று, பணிகளை ஆய்வு செய்து, மக்களிடம் மனுக்கள் பெற உள்ளனர்.