/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரிட்டன் கண்காட்சியில் ஏற்றுமதியாளர்களுக்கு தனி அங்கீகாரம்! ஆயத்தமாக வேண்டுமென ஆலோசகர் அட்வைஸ்
/
பிரிட்டன் கண்காட்சியில் ஏற்றுமதியாளர்களுக்கு தனி அங்கீகாரம்! ஆயத்தமாக வேண்டுமென ஆலோசகர் அட்வைஸ்
பிரிட்டன் கண்காட்சியில் ஏற்றுமதியாளர்களுக்கு தனி அங்கீகாரம்! ஆயத்தமாக வேண்டுமென ஆலோசகர் அட்வைஸ்
பிரிட்டன் கண்காட்சியில் ஏற்றுமதியாளர்களுக்கு தனி அங்கீகாரம்! ஆயத்தமாக வேண்டுமென ஆலோசகர் அட்வைஸ்
UPDATED : மே 10, 2025 04:51 AM
ADDED : மே 10, 2025 02:42 AM

திருப்பூர், : பிரிட்டன் கண்காட்சிகளில் பங்கேற்று, இந்தியாவுக்கென தனி அங்கீகாரத்தை உருவாக்க, ஏற்றுமதியாளர்கள் ஆயத்தமாக வேண்டுமென, வர்த்தக ஆலோசகர்கள் மற்றும் ஆடிட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா - பிரிட்டன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது, புதிய வர்த்தக வளர்ச்சிக்கு வழிகாட்டும்; இத்தகைய ஒப்பந்தத்தால், சுங்கவரி சலுகையுடனும், வரி விலக்குடன் வர்த்தகம் செய்ய முடியும்.
ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை, காலணி மற்றும் தோல் பொருட்கள், ஆயுர்வேத பொருட்கள், பொம்மைகள் மற்றும் நகைகள், வாகன உதிரி பாகங்கள், பொறியியல் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யலாம். வரிச்சலுகையால், சீன பொருட்களுக்கு போட்டியாக, பிரிட்டன் சந்தைகளில், இந்திய உற்பத்தி பொருட்கள் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து பின்னலாடை தொழில் ஆலோசகரான, ஆடிட்டர் அஸ்வின் அரசப்பன் கூறியதாவது:
இனிவரும் நாட்களில், பிரிட்டனில் நடக்கும் வர்த்தக கண்காட்சிகளில் அதிகம் பங்கேற்க வேண்டும்; லண்டனில் செப்., மாதம் நடக்கும் ஜவுளி கண்காட்சி மற்றும் நகை கண்காட்சியால், புதிய வர்த்தகம் கிடைக்கும்.
இம்மாத கடைசி வாரத்தில் நடக்கும் சர்வதேச பிரிட்டன் வர்த்தக கண்காட்சியால், புதிய வர்த்தக தொடர்பு உருவாகும். முன்கூட்டியே சந்திப்புகளை உருவாக்கி, வர்த்தக பிரதிநிதிகளால், வாய்ப்புகளை வசப்படுத்தலாம். வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் என்பது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, அதிகபட்ச வரிவிலக்கை அளிக்கிறது. கடும் போட்டியாக இருந்த பிரிட்டன் சந்தைகள், இனி இந்தியாவுக்கு எளிதாக மாறும். அந்நாட்டு வர்த்தகர்களும், மக்களும், இந்திய பொருட்களை அதிகம் விரும்புவர்.
குறிப்பாக, வரிசலுகையுடன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய, பிராண்ட் முறையில் அறிமுகம் ஆகவேண்டும். பிரிட்டன் சந்தைகளில், இந்தியாவுக்கென தனி அங்கீகாரத்தை உருவாக்க, ஏற்றுமதியாளர்கள் ஆயத்தமாக வேண்டும்; பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை வாய்ப்புகளை நிரந்தரமாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
சர்வதேச பிரிட்டன் வர்த்தக கண்காட்சியால், புதிய வர்த்தக தொடர்பு உருவாகும். முன்கூட்டியே சந்திப்புகளை உருவாக்கி, வர்த்தக பிரதிநிதிகளால், வாய்ப்புகளை வசப்படுத்தலாம். வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் என்பது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, அதிகபட்ச வரிவிலக்கை அளிக்கிறது