/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இலக்கியத்தில் உடல் மொழி' சிறப்பு கருத்தரங்கம்
/
'இலக்கியத்தில் உடல் மொழி' சிறப்பு கருத்தரங்கம்
ADDED : செப் 30, 2025 11:59 PM

திருப்பூர்; திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுரி, தமிழ் உயராய்வுத் துறை சார்பில், 'இலக்கியத்தில் உடல் மொழிகள்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஷகிலா ஏஞ்சலின் வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் பாலசுப்ரமணியன், முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் சதீஷ்குமார் பேசினார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, உடுமலை அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் வேலுமணி, சங்க மற்றும் நவீன இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள உடல் மொழி சார்ந்த செய்திகளை விளக்கினார்.
முன்னதாக, மாணவன் நித்தீஸ்வரன், தேவாரப்பாடல் பாடினார். நிகழ்ச்சிகளை முனைவர் பட்ட ஆய்வாளர் புவனேஸ்வரி, இளங்கலை மாணவன் ஜெகதீஸ்வரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் மோகனப்பிரியா, நன்றி கூறினார்.