ADDED : நவ 14, 2024 04:43 AM
திருப்பூர்: சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக தொடர்ந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஹூப்ளி - கோட்டயம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:07371) வரும், 19 முதல், 2025 ஜன., 14 வரை செவ்வாய் தோறும் இயங்கும். மதியம், 3:15 க்கு ஹூப்ளியில் புறப்படும் ரயில், மறுநாள் மதியம், 12:00 மணிக்கு கோட்டயம் சென்று சேரும்.
சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும் இந்த ரயில், கோவை செல்லாமல், போத்தனுார் வழியாக பயணிக்கும். திருப்பூருக்கு புதன் அதிகாலை 4:53 க்கு வரும்.
மறுமார்க்கமாக, வரும், 20ம் தேதி முதல், 2025 ஜன., 15 வரை புதன்தோறும், கோட்டயம் - ஹூப்ளி வாராந்திர ரயில் (எண்:07232) இயங்கும். கோட்டயத்தில் மதியம், 3:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் மதியம், 12:50 க்கு ஹூப்ளி சென்று சேரும்.
இந்த ரயில், திருப்பூர் ஸ்டேஷனை இரவு,10:33க்கு கடக்கும்.