/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புரட்டாசி மாத பிறப்பு சிறப்பு வழிபாடு
/
புரட்டாசி மாத பிறப்பு சிறப்பு வழிபாடு
ADDED : செப் 18, 2025 12:12 AM

பொங்கலுர்; பொங்கலுார் ஒன்றியம், கோவில்பாளையம் அருகேயுள்ள ராமசாமி கோவிலில் புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி கணபதி ஹோமம், கோமாதா பூஜை, உலக அமைதி வேண்டி கூட்டு பிரார்த்தனை வழிபாடு ஆகியன நடந்தது.
பொங்கலுார் பிரபஞ்ச பீடம் பிரபஞ்சானந்தா தெய்வசிகாமணி சுவாமி, கொங்கு மண்டல நாராயண ஜீயர் சுவாமி, சிவபுரம் அருட்சோதி தபோவனம் தம்பிரான் சுவாமி உட்பட பலர் கலந்து பங்கேற்றனர்.
பெருந்தொழுவு ஸ்ரீ பாண்டீஸ்வர சுவாமி கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாக வேள்வி, மகா அபிஷேகம், தீர்த்த அபிஷேகம், அன்னதானம் நடந்தது. பெருந்தொழுவு ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில் திருமஞ்சனம், சிறப்பு ஆராதனை நடந்தது. இந்நிகழ்ச்சிகளில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.