/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமங்கையாழ்வார் சிறப்பு வழிபாடு
/
திருமங்கையாழ்வார் சிறப்பு வழிபாடு
ADDED : டிச 05, 2025 07:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கை யாழ்வார், கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார்.
அவர் பிறந்த நட்சத்திரமான நேற்று, திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருமங்கை யாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. 13 தீர்த்த கலசத்துடன், ஹோம பூஜைகள் நடைபெற்றன. திருமங்கையாழ்வார், ராஜ அலங்காரத்தில் சப்பரத்தின் எழுந்தருளி, கோவில் உள் பிரகாரத்தில் வலம்வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

