/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வித்ய நேத்ரா பள்ளியில் விளையாட்டு தின விழா
/
வித்ய நேத்ரா பள்ளியில் விளையாட்டு தின விழா
ADDED : அக் 28, 2024 11:39 PM

உடுமலை : கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது.
இப்பள்ளியில் நடந்த விளையாட்டு தின விழாவில் மாணவி மகிமா வரவேற்றார். தொடர்ந்து கோவை ராமகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர் அமுதன் தேசியக்கொடி ஏற்றினர்.
பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஒலிம்பிக் கொடி ஏற்றி விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார். மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
பள்ளி விளையாட்டு செயலாளர் மாணவி காருண்யா விளையாட்டு தின உறுதிமொழி கூறினார். மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோருக்கான போட்டிகள் நடத்தப்பட்டது.
பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தாமரைக்கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி அக் ஷயா நன்றி தெரிவித்தார்.
பள்ளி தாளாளர் நந்தகோபலாகிருஷ்ணன், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் விழாவில் பங்கேற்றனர்.