/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய்ஸ்ரீராம் பள்ளியில் விளையாட்டு விழா
/
ஜெய்ஸ்ரீராம் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : செப் 28, 2025 12:04 AM

திருப்பூர், : அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டு விழா நடைபெற்றது.
பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் முத்து அருண் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கலைச்செல்வி வரவேற்றார். அவிநாசிபாளையம் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ஜெய்ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி முதல்வர் யமுனாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் விளையாட்டு போட்டிகளைத் துவக்கி வைத்தனர். தடகளப் போட்டிகளில், ஆர்யபட்டா, பஸ்கரா, ரோகிணி, கல்பனா ஆகிய அணிகள் விளையாடின. இதில் ரோகிணி அணி அதிக புள்ளிகள் பெற்று நடப்பாண்டுக்கான சாம்பியன்ஷிப் கோப்பையைப் பெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. பள்ளி நிர்வாக அலு வலர் சரவணன் நன்றி கூறினார். விளையாட்டு ஆசிரியர்கள் கார்த்திகேயன், புவனேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.