/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
/
கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
ADDED : மே 13, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்,; திருப்பூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்பு துறையினர் மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தனர்.
படியூர், ஒட்டப்பாளையத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று மதியம் வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த புள்ளி மான் ஒன்று, எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்தது. உடனே, அக்கம்பக்கத்தினர், காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள், 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி, கயிற்றின் மூலமாக உள்ளே விழுந்த மானை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின், மானை பத்திரமாக அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.