ADDED : ஆக 16, 2025 09:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா சுவாமி திருமடத்தில்குருக்ருபா சேவா அறக்கட்டளையின் சார்பில், 12ம் ஆண்டு ஸ்ரீ ராதாமாதவ விவாஹ மஹோத்ஸவம் நடந்தது.
இதையொட்டி, ஸம்பிரதாய பஜன், அஷ்டபதி, திவ்ய நாமம் ஆகியவை ஸ்ரீஹரினி வினோத் குழுவினர் நடத்தினர். கும்பகோணம் ஸ்ரீ வெங்கடேஷ் பாகவதர் குழுவினரின் ராதா கல்யாணம், வசந்த உத்ஸவம் ஆகியவை நடந்தன.
திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை குருக்ருபா சேவா அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.