/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா
/
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED : மார் 20, 2024 12:03 AM

திருப்பூர்;திருப்பூர் விசாலாட்சியம்மன் உடனமர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், கும்பாபிேஷக, 8ம் ஆண்டு விழா, நேற்று விமரிசையாக நடந்தது.
திருப்பூர் நகரின் மையப்பகுதியில் உள்ள, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கும்பாபிேஷகம் நடந்து, ஏழு ஆண்டுகளாகிய நிலையில், 8வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
காலை, 9:00 மணி முதல், ஸ்ரீவிநாயகர் வழிபாடு, புண்யாகம், கலச ஆவாஹண பூஜை, திரவியாகுதி, மகா பூர்ணாகுதி பூஜைகள் நடந்தன. மகா மண்டபத்தில், அதிகாரநந்தி வாகனத்தில், அம்மையப்பரை கலசத்தில் எழுந்தருள செய்து, மகா யாகம் நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை முழங்கி, ேஹாம வழிபாடுகளை நடத்தினர். வேள்வி நிறைவை தொடர்ந்து, மங்கள வாத்திய இசையுடன், கலசங்கள் கோவிலை சுற்றிவந்தன. விநாயகர், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஷண்முக சுப்பிரமணியம், விசாலாட்சியம்மன் மூலவருக்கு, மகா அபிேஷகம், கலசாபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது. ஓதுவா மூர்த்திகளின் தேவார, திருவாசக பாராயணத்தை தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, ஆதீஸ்வரர் டிரஸ்ட் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

