/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புனித தோமையர் சர்ச் தேர்த்திருவிழா
/
புனித தோமையர் சர்ச் தேர்த்திருவிழா
ADDED : ஜூலை 20, 2025 11:25 PM

அவிநாசி; அவிநாசியில் புனித தோமையர் சர்ச் தேர் திருவிழா கொண்டாடப்பட்டது.
அவிநாசி புனித தோமையர் சர்ச் தேர்த்திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை 6:00 மணிக்கு திருப்பலி, மறையுறை மற்றும் நற்கருணை ஆராதனை நடத்தப்பட்டது. பல்வேறு தேவாலயங்களை சேர்ந்த குருக்கள் பங்கேற்று மறையுரை வழங்கினர்.
நேற்று திருவிழா நடந்தது. காலை 8:30 மணிக்கு கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. சிறுவர், சிறுமியருக்கு புது நன்மை, உறுதி பூசுதல் வழங்கப்பட்டது.
மாலை 5:30 மணிக்கு தேர்த்திருவிழா சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.
கருமத்தம்பட்டி மறை மாவட்ட முதன்மை குரு அருண் தலைமையில் திருப்பலி நடந்தது. பின் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித தோமையர் பவனி வந்தார். தாலுகா அலுவலகம், காமராஜர் வீதி, முத்துச்செட்டிபாளையம் வழியாக சர்ச்சை சென்றடைந்தது.
திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திருவிழா ஏற்பாடுகளை தேவாலய பங்கு குரு மரிய ஜோசப் மற்றும் பங்கு மக்கள், அன்பிய பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.