/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; 414 மனு அளித்த பொதுமக்கள்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; 414 மனு அளித்த பொதுமக்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; 414 மனு அளித்த பொதுமக்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; 414 மனு அளித்த பொதுமக்கள்
ADDED : செப் 18, 2025 11:25 PM
அவிநாசி; அவிநாசி, மேற்கு ரத வீதி, குலாலர் திருமண மண்டபத்தில், நகராட்சி 1 மற்றும் 2வது வார்டுகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், நகராட்சி தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. கமிஷனர் வெங்கடேஸ்வரன், தாசில்தார் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், 100க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று, பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். மகளிர் உரிமை திட்டத்தில், 156 பேர் விண்ணப்பம் அளித்தனர். சாதி சான்று, பட்டா மாறுதல், பென்சன், மருத்துவ காப்பீட்டு, ஆதார் திருத்தங்கள், குடும்ப அட்டையில் திருத்தம் என பல்வேறு கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் மனு அளித்தனர்.
முகாமில் பொதுமக்களிடமிருந்து மொத்தம், 414 மனுக்கள் பெறப்பட்டன.