/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்; வெள்ளகோவிலில் இன்று துவக்கம்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்; வெள்ளகோவிலில் இன்று துவக்கம்
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்; வெள்ளகோவிலில் இன்று துவக்கம்
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்; வெள்ளகோவிலில் இன்று துவக்கம்
ADDED : ஆக 01, 2025 11:06 PM
திருப்பூர்; 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்கிற பெயரில் சிறப்பு மருத்துவ முகாம், தமிழகம் முழுவதும் இன்று துவங்குகிறது. சென்னையில் நடைபெறும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் முகாமை துவக்கிவைக்கிறார்.
திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவில் அமல அன்னை மகளிர் உயர்நிலை பள்ளியில் துவக்க விழா நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 1256 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடைபெறும் இம்முகாம்களில், புற்று நோய் கண்டறிதல், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கல், அமைப்புசாரா தொழிலாளர் அட்டை வழங்கல், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., - எக்கோ, எக்ஸ்ரே, சளி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இதய மருத்துவம், எலும்பியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை, மகப்பேறு, இயன்முறை, பல், கண் மருத்துவம், மனநலம், குழந்தைகள் நலம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும்.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகள் பதிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழும் இம்முகாம்களிலேயே வழங்கப்பட உள்ளது என, கலெக்டர் மனிஷ்நாரணவரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.