/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நட்சத்திர குட்டீஸ்' கண்கவர் நிகழ்ச்சி
/
'நட்சத்திர குட்டீஸ்' கண்கவர் நிகழ்ச்சி
ADDED : செப் 15, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; அவிநாசி, சேவூர் ரோடு, மாமரத் தோட்டத்திலுள்ள பழனியப்பா இன்டர் நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில், நட்சத்திர குட்டீஸ் நிகழ்ச்சி நடந்தது.
ரோட்டரி செலிப்ரேஷன், ஜேசிஐ மற்றும் பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி ஆகியன இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், 2 முதல், 5 வயது வரையுள்ள குழந்தைகள், வண்ணமயமான நவராத்திரி பாரம்பரிய உடையணிந்து, பங்கேற்றனர். குழந்தைள் தங்களின் அழகான நடை, ஆடல், பாடல், பேச்சு என, திறமைகளை வெளிப்படுத்தினர். மழலை மாறா குழந்தைகளின் புன்னகையும், உற்சாகமும், பார்வையாளர்களை குதுாகலப்படுத்தியது. பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.