/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில கைப்பந்து அரசுப்பள்ளி அபாரம்
/
மாநில கைப்பந்து அரசுப்பள்ளி அபாரம்
ADDED : நவ 25, 2024 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; மாநில கைப்பந்து அணியில் இடம் பிடித்த திருப்பூர் அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் சார்பில், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில், 21வது மாநில அளவிலான மாணவ, மாணவியருக்கான கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது.இதில், திருப்பூர் மாவட்ட அணியில், பாண்டியன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் விஷ்ணு பிரசாந்த், கிேஷார் மற்றும் மாணவியர் பிரிவில் நிதர்சனா ஆகியோர் பங்கேற்றனர். அவர்களை பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன், உடற்கல்வி ஆசிரியர் பூபாலன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.