/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில ஹாக்கி போட்டி; சென்சுரி பள்ளி தேர்வு
/
மாநில ஹாக்கி போட்டி; சென்சுரி பள்ளி தேர்வு
ADDED : செப் 27, 2025 12:13 AM

திருப்பூர்; மாநில அளவிலான முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டிக்கு ராக்கியாபாளையம் சென்சுரி பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் நடந்தது. இதில் 25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. சென்சுரி பள்ளி பதினோராம் வகுப்பு மாணவர் சூர்யா, ஏழாம் வகுப்பு ரிஸ்வான் இருவரும் திருப்பூர் மாவட்ட ஹாக்கி அணிக்கு விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் அக். 3 முதல் 7ம் தேதி வரை துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெறும் மாநில அளவிலான முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாட உள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், பயிற்சியாளர் பாலசுப்பிரமணியம் மூவரையும் பள்ளியின் முதல்வர் ஹெப்சிபா பால், தாளாளர் சக்திதேவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்தினர்.