/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் வீதிதோறும் போகி? மாநகராட்சி நிர்வாகத்தை கலாய்க்கும் 'நெட்டிசன்ஸ்'
/
திருப்பூரில் வீதிதோறும் போகி? மாநகராட்சி நிர்வாகத்தை கலாய்க்கும் 'நெட்டிசன்ஸ்'
திருப்பூரில் வீதிதோறும் போகி? மாநகராட்சி நிர்வாகத்தை கலாய்க்கும் 'நெட்டிசன்ஸ்'
திருப்பூரில் வீதிதோறும் போகி? மாநகராட்சி நிர்வாகத்தை கலாய்க்கும் 'நெட்டிசன்ஸ்'
ADDED : டிச 24, 2025 07:14 AM

திருப்பூர்: திருப்பூரின் பிரதான மற்றும் கிராமப்புற சாலையோரம் முழுக்க, குப்பை குவிந்துக் கிடக்கும் நிலையில், அவை எரியூட்டுப்பட்டு, புகை மாசு ஏற்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், 'வீதி தோறும் போகி' என கிண்டலடித்து வருகின்றனர் பொதுமக்கள்.
அடுத்த மாதம், பொங்கல் பண்டிகை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்பதே இதன் அடிப்படை. தீயவனற்றை அகற்றி, நன்மையை உட்புகுத்தி கொள்ள வேண்டும் என்பதை போகி பண்டிகை உணர்த்துகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் சேகரமாகும் குப்பையை அப்புறப்படுத்த இடமில்லாததால், கோவில் வழி - வீரபாண்டி ரோடு, வஞ்சிப்பாளையம் ரோடு உள்ளிட்ட நகரின் பிரதான ரோடுகள் மட்டுமின்றி, ஊரக ரோட்டோரங்களிலும் குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளன. குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள், அவ்வப்போது எரியூட்டப்படுகின்றன. வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பை மட்டுமின்றி, தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்டு, எரியூட்டப்படுவதால், அந்த புகையை சுவாசிப்போருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது; துர்நாற்றம் வீசுகிறது.
'புகைமாசு ஏற்படுத்தும் வகையில் குப்பை, டயர் உள்ளிட்டவற்றை எரியூட்டக் கூடாது' என்பது, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவு. இந்நிலையில், திருப்பூர் நகரில் குப்பை எரியூட்டப்படும் நிலையில் 'வீதி தோறும் போகி' என, கிண்டலடித்து வருகின்றனர் மக்கள். சிலர் இதனை சமூக ஊடகங்களில், 'மீம்ஸ்' வெளியிட்டு கலாய்த்தும் வருகின்றனர்.

