தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மன அழுத்த மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

மன அழுத்த மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

மன அழுத்த மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி


UPDATED : அக் 22, 2026 05:46 PM

ADDED : அக் 22, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 05:46 PM ADDED : அக் 22, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை அரசு கல்லூரியில், மாணவர்களுக்கு, ‘மனநலம் மற்றும் மனஅழுத்த மேலாண்மை’ என்ற தலைப்பில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பாலின உளவியில் மற்றும் கண்காணிப்பு குழுவின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, திருப்பூர் மருத்துவக்கல்லூரி உளவியல் துறையின் மூத்த பேராசிரியர் டாக்டர் சஞ்சய்போஸ் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:

மனிதர்கள் சேர்த்து வைக்கின்ற செல்வங்களுள், மிகப் பெரிய செல்வம் உடல்நலன் ஆகும். இந்த உடல்நலத்திற்கு அடிப்படையாக இருப்பது மன நலம் ஆகும்.

மனதை ஆரோக்கியமாகவும், வலுவானதாகவும் வைத்துக் கொண்டால், நாம் எண்ணியதை சாதிக்க முடியும்.

இன்றைய இளைஞர்கள் தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாவதால், செயலாற்றத்தை பாதிக்கிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில், ஆரோக்கியமற்ற சூழலை ஏற்படுத்துகிறது.

சவால்களை எதிர்கொண்டு நம்முடைய முழுத்திறனையும் வெளிப்படுத்தி வாழ்க்கையில், வெற்றி பெற வேண்டுமானால், சிந்தனைத்தெளிவும் எதற்கும் கலங்காத உறுதியான மனநிலையும் தேவை.

பதற்றமில்லாமல் எதனையும் பொறுமையாக அணுகவேண்டும். தகவல் தொடர்பு ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுதல், முறையற்ற உணவுப்பழக்கம், உறக்கமின்மை ஆகியவை மன நல பாதிப்பிற்கான முக்கியக் காரணங்களாக அமைகின்றன.

பிரச்னைகளைக் கண்டு பயப்படாமல், அவற்றை எதிர்கொண்டு தீர்வுக்கான வழிமுறைகளை ஆராயும் மனப்பக்குவத்தை வளர்த்தக்கொண்டால், மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

இவ்வாறு, பேசினார்.

இதில், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சூரியபிரபா, அரசுக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர் மலர்வண்ணன், இயற்பியல் துறைப்பேராசிரியர் குமரவடிவேல் மற்றும் பேராசிரியர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us