UPDATED : நவ 08, 2026 03:42 PM
ADDED : நவ 08, 2026 03:38 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நகராட்சிகளில் துாய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதில் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் தயக்கம் காட்டியதால் சர்ச்சை எழுந்தது.
இந்தாண்டு ரூ.3,000 போனஸ் வழங்கக் கோரி, பூண்டி, உடுமலை, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட 7 நகராட்சிகளைச் சேர்ந்த பணியாளர்கள் போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டைப் போலவே ரூ.1,000 போனஸ் வழங்க ஒப்பந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. இதனால், அறிவிக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டத்தை துாய்மைப் பணியாளர் சங்கத்தினர் திரும்பப் பெற்றனர்.
