/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிமங்கலத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் துவக்கம்
/
குடிமங்கலத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் துவக்கம்
குடிமங்கலத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் துவக்கம்
குடிமங்கலத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் துவக்கம்
ADDED : மார் 06, 2024 12:13 AM

உடுமலை;குடிமங்கலம் வட்டாரத்தில், மாணவர் சேர்க்கைக்கான வாகன விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது.
அனைத்து அரசுப்பள்ளிகளிலும், புதிய கல்வியாண்டு 2024 - 25க்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் முதல் துவங்கியுள்ளது.
எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில், கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேர்க்கையை அதிகரிக்கவும், அரசுப்பள்ளிகளின் சிறப்புகளை பொதுமக்களிடம் கொண்டுசேர்ப்பதற்கு, வாகன விழிப்புணர்வு ஊர்வலம் கிராமங்களில் நடத்தப்படுகிறது.
இதன் அடிப்படையில், குடிமங்கலம் வட்டாரத்தில் இந்த ஊர்வலம் நேற்று துவங்கியது. குடிமங்கலம் வட்டாரத்தில், 60 கிராமங்கள் உள்ளன.
அனைத்திலும் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கான சேர்க்கையை அதிகரிப்பதற்கு, நேற்று முதல் பயணம் துவங்கியது.
தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் ஜகதீசன் துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் ரோஜாவானரசி, பள்ளி தலைமையாசிரியர்கள் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த விழிப்புணர்வு வாகனத்தின் வாயிலாக, அனைத்து கிராம பகுதிகளிலும் சேர்க்கை குறித்து துண்டு பிரசுரங்கள்வினியோகிக்கப்படுகிறது.
அரசுப்பள்ளியின் எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவு திட்டம், வாசிப்பு திறன் மேம்பாடு, புதுமைப்பெண் திட்டம், நுாலகம் நேரம் உள்ளிட்டவை கொண்ட நோட்டீஸ் பெற்றோருக்கு வினியோகிக்கப்படுகிறது.
ஒலிபெருக்கி வாயிலாகவும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

