/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு 'தொல்லை': கல்லுாரி மாணவருக்கு 'காப்பு'
/
மாணவர்களுக்கு 'தொல்லை': கல்லுாரி மாணவருக்கு 'காப்பு'
மாணவர்களுக்கு 'தொல்லை': கல்லுாரி மாணவருக்கு 'காப்பு'
மாணவர்களுக்கு 'தொல்லை': கல்லுாரி மாணவருக்கு 'காப்பு'
ADDED : நவ 16, 2025 02:02 AM
திருப்பூர்: காங்கேயத்தில் அரசு மாணவர் விடுதியில், பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம், பாரதியார் நகரில் சமூக நீதி விடுதி செயல்பட்டு வருகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 50 மாணவர்கள் தங்கி, பள்ளியில் படித்து வருகின்றனர். விடுதி வார்டனாக மாரிமுத்து, 45, உள்ளார்.
தற்காலிக வார்டனாக காங்கேயத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அரவிந்த், 22; என்பவரை, இரு ஆண்டு களாக விடுதியில் தங்க வைத்து, மாத சம்பளம் கொடுத்து வருகிறார்.
காங்கேயம் அரசு மேல்நிலை பள்ளியில், நேற்று முன்தினம் குழந்தைகள் தின விழா நடந்தது.
அதில், திருப்பூர் சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று விழிப்புணர்வு செய்த போது, விடுதியை சேர்ந்த மாணவர்கள் சிலர், தங்களுக்கு அரவிந்த் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கொடுத்தனர். இதன் எதிரொலியாக, கலெக்டர் மனிஷ் நாரணவரே, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், குழந்தைகள் நல குழுவினர், சைல்டு லைன் அமைப்பினர் உள்ளிட்டோர் நேற்று காங்கேயம் சென்று சம்பந்தப்பட்ட விடுதியில் விசாரித்தனர்.
அப்போது, அரவிந்த், ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் எட்டு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. காங்கேயம் மகளிர் போலீசார் அரவிந்த் மீது 'போக்சோ' வழக்கு பதிந்து கைது செய்தனர்.
எவ்வித அனுமதியும் இன்றி, தற்காலிக வார்டனாக அரவிந்த் செயல்பட்டது தொடர்பாக மாரிமுத்துவிடமும் விசாரிக்கின்றனர்.

