/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனை 30 நொடிகளில் கடந்த ரயில்
/
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனை 30 நொடிகளில் கடந்த ரயில்
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனை 30 நொடிகளில் கடந்த ரயில்
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனை 30 நொடிகளில் கடந்த ரயில்
ADDED : நவ 16, 2025 01:45 AM
திருப்பூர்;தெற்கு ரயில்வேயில் குறிப்பிடத்தக்க வழித்தடங்களில், முதன்மையானதாக கோவை - சென்னை ரயில் வழி உள்ளது. கோவை - ஜோலார்பேட்டை இடையே ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்துவதன் ஒரு பகுதியாக, நேற்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
காலை 8:00 மணிக்கு கோவையில் புறப்பட்ட ரயில், 8:48 மணிக்கு திருப்பூர் வந்தது. ரயில், 2வது பிளாட்பார்ம் வரும் முன்பாக மைக்கில்,' பயணிகள் யாரும் தண்டவாளத்தை கடக்க வேண்டாம்; அதிவேக ரயில், 150 கி.மீ. வேகத்தில், திருப்பூர் ஸ்டேஷனை கடக்க போகிறது,' என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆர்.பி.எப். அதிகாரிகள், ரயில்வே போலீசார் பிளாட்பார்மில் இருந்து பயணிகள் யாரும் ரயில்பாதையில் இறங்கி விடாமல், ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். 150 கி.மீ., வேகத்தில், அதிவேகமாக வந்த ரயில், 30 நொடிகளில் திருப்பூர் ஸ்டேஷனை கடந்தது.
ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கோவை - சேலம் - சென்னை வழித்தடத்தில் ரயில்களை வேகப்படுத்துவதன் ஒரு பகுதியாக அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது, கோவை - சேலம், கோவை - ஜோலார்பேட்டை வரை ரயில்கள், 110 கி.மீ., வேகத்திலும், ஜோலார்பேட்டை முதல் சென்னை வரை, 130 கி.மீ. வேகத்திலும் இயக்கப்படுகிறது.
கோவை - ஜோலார்பேட்டை இடையே, 130 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கினால், ரயில்களின் பயண நேரம் குறையும். அதற்காகவே அதிவேக ரயில் சோதை ஓட்டம். கடந்த மாதம், ஜோலார்பேட்டை - கோவை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் திருப்திகரமாக முடிந்துள்ளதால், தற்போது கோவை - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் சோதனை நடத்தப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.

