/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆறு, ஏழு வகுப்புகளுக்கு தேர்வு நிறைவு மாணவர்கள் உற்சாகமாக கொண்டாட்டம்

ADDED : ஏப் 23, 2025 10:49 PM

உடுமலை; அரசுப்பள்ளிகளில் ஆறு, ஏழாம் வகுப்பு மாணவர்கள், முழு ஆண்டு தேர்வு நிறைவுபெற்றதை உற்சாகமாக கொண்டாடினர்.
அரசு பள்ளி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஏப்., 7ம் தேதி முதல் முழு ஆண்டு தேர்வு துவங்கியது. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில், 186 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
அதில், துவக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, கடந்த 17ம் தேதியுடன் முழு ஆண்டுத்தேர்வு நிறைவடைந்தது. நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடர்ந்து நடந்தது.
நேற்றுடன், ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்தது. இன்று முதல் கோடை விடுமுறை துவங்கியுள்ளது. எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வு நிறைவடைகிறது.
நாளை முதல் விடுமுறை ஆரம்பமாகிறது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவங்கியுள்ளதையொட்டி உற்சாகத்தோடு கொண்டாடினர்.
குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் நண்பர்களின் மீது வண்ணப்பொடிகளை பூசி தேர்வு நிறைவு பெற்றதை கொண்டாடினர். ஆசிரியர்களுக்கு ஏப்., இறுதி வரை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.