தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குப்பை பிரச்னை போராட்டம் பங்கேற்றவர்களுக்கு ‘சம்மன்’ போராட்டக்குழுவினர் அதிர்ச்சி

குப்பை பிரச்னை போராட்டம் பங்கேற்றவர்களுக்கு ‘சம்மன்’ போராட்டக்குழுவினர் அதிர்ச்சி

குப்பை பிரச்னை போராட்டம் பங்கேற்றவர்களுக்கு ‘சம்மன்’ போராட்டக்குழுவினர் அதிர்ச்சி


UPDATED : நவ 21, 2026 07:58 PM

ADDED : நவ 21, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 07:58 PM ADDED : நவ 21, 2026 07:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: திருப்பூர் அருகே, இடுவாய், சின்னக்காளிபாளையம் கிராமத்தில், திருப்பூர் மாநகராட்சியின் குப்பைகள் கொட்டப்படுவதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த தி.மு.க. ஆட்சியின்போது நடந்த இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர்கள், 12 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, 28 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பின் ஜாமினில் வெளியே வந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, இவ்விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என, கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதனை நடைமுறைப்படுத்துவதற்குள் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. த.வெ.க., அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், தற்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு புதிதாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

போராட்டக் குழுவினர் கூறுகையில், ‘குப்பை விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நியாயமான போராட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, சிறையிலும் அடைக்கப்படும். கடந்த தி.மு.க., அரசு வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி ஏமாற்றியது. இதனை தொடர்ந்து, தற்போது ஆட்சியில் உள்ள த.வெ.க., அரசும், வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று கூறியது. ஆனால், தற்போது திடீரென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க., அரசு செய்த செயலை த.வெ.க., அரசும் தொடர்கிறதா என்ற அச்சம் உள்ளது. வழக்கை வாபஸ் பெறுவது குறித்து, ஆட்சியாளர்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். உரிய தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us