/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா
/
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா
ADDED : ஆக 01, 2025 10:45 PM

அவிநாசி; அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் செம்பியநல்லுாரில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குருபூஜை விழா சிறப்பாக நடக்கும். அவ்வகையில், அவிநாசி கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனார் உட்பட, 63 நாயன்மார்களுக்கு அபிேஷகம் செய்விக்கப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில், சிவனடியார்கள் பங்கேற்று அவிநாசி தேவாரம் பாராயணம் செய்தனர்.
அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லுாரில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் கோவிலில் 6ம் ஆண்டு ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா, நேற்று கணபதி ஹோமம், 108 சங்கு பூஜை ஆகியவற்றுடன் துவங்கியது.
தொடர்ந்து, சுந்தரமூர்த்தி நாயனார் பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், திருமுறை விண்ணப்பம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. குருபூஜை விழாவை முன்னிட்டு சுந்தரமூர்த்தி நாயனார் பொதுநல அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.